உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓடும் ரயிலில் நகை பறித்தவர் சிக்கினார்

ஓடும் ரயிலில் நகை பறித்தவர் சிக்கினார்

சென்னை, பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, 70, என்பவர் பயணம் செய்தார்.ரயில் பேசின்பாலம் - சென்னை சென்ட்ரல் இடையே மெதுவாக வந்தபோது, விஜயலட்சுமி அணிந்திருந்த 6 கிராம் தங்க செயினை, வாலிபர் ஒருவர் பறித்து தப்பினார்.அதேபோல், பாலக்காடு விரைவு ரயிலில், ஒரு பெண்ணிடம் அதே வாலிபர் நகை பறிப்பில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இது குறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், வில்லிவாக்கம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த குமரேசன், 30, என்பவர், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செயின்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை