உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணலி புதுநகர் மாணவர்கள் சர்வதேச சிலம்பத்தில் அசத்தல்

மணலி புதுநகர் மாணவர்கள் சர்வதேச சிலம்பத்தில் அசத்தல்

மணலிபுதுநகர்:கத்தார் நாட்டில், ஆருத்ரா சிலம்பம் அகாடமி மற்றும் கத்தார் தமிழர்கள் பாரம்பரிய கலைகள் சங்கத்தின் சார்பில், ஏப்., 25ம் தேதி, சர்வதேச சிலம்ப போட்டிகள் நடந்தன.இதில், இந்தியா, இலங்கை, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, சிலம்ப மாணவர்கள் பங்கேற்றனர்.அதன்படி, மணலிபுதுநகர், பேரின்பம் சிலம்ப கலைக்கூடம் சார்பில், ஐந்து மாணவர்கள், பயிற்சியாளர் டேவிட் தலைமையில் பங்கேற்றனர். அதில், 10 வயதிற்குட்பட்டோர் தனித்திறன் சிலம்ப போட்டியில், பி.எஸ்.பார்த்திபன், தங்கம் வென்றார்.பத்து வயதிற்குட்பட்ட தொடுமுறை போட்டியில், எஸ்.கவுதம் தங்கமும், 15 வயதிற்குட்பட்ட தொடுமுறை போட்டியில், ஆர்.ஜி.ஹரிணிஸ்ரீ வெள்ளி பதக்கமும், எம்.ஷியாம் சைலேந்தர் மற்றும் பி.ஹேமதர்சன் ஆகியோர் வெண்கலமும் வென்றனர்.அதிக புள்ளிகள் அடிப்படையில், பேரின்பம் சிலம்ப கலைக்கூடம் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, மணலிபுதுநகர் - தனியார் திருமண மண்படத்தில் நடந்தது.இதில், சமத்துவ மக்கள் கழக இளைஞரணி தலைவர் கார்த்திக், டி.வி.எம்., சேவா பால நிறுவனர் இருளப்பன் உள்ளிட்டோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை