உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற மருத்துவ பிரதிநிதி கைது

போதை மாத்திரை விற்ற மருத்துவ பிரதிநிதி கைது

கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி., நகரில் புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை உதவி ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பெரம்பூர் ரேவதி ஸ்டோர் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். இதில், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் சிக்கின.விசாரணையில், திரு.வி.க.நகரைச் சேர்ந்த அருள் ஜஸ்டின், 28, என்பதும் தனியார் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிவதும் தெரிய வந்தது.மேலும், செயலி வாயிலாக பழக்கமான வினய் என்பவரிடம் இருந்து, ஒரு போதை மாத்திரை அட்டை 1,000 ரூபாய்க்கு வாங்கி, 1,500 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அருள் ஜஸ்டினை, 28, கைது செய்தனர்.

3 பேர் சிக்கினர்

ஓட்டேரி தனிப்படை போலீசார், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, சந்தேக நபர்களை மடக்கி சோதனையிட்டனர். இதில், 7 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் சிக்கியது. அதன் மதிப்பு, 1 கிராம் 4,000 ரூபாய். பிடிபட்டவர்கள், அயனாவரத்தைச் சேர்ந்த மணிமாறன், 22, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கவுதம், 23, மற்றும் சிவகுமார், 22, ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில், மணிமாறன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை