உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெமு சிறப்பு ரயில்கள் பயணியரிடம் பெரும் வரவேற்பு

மெமு சிறப்பு ரயில்கள் பயணியரிடம் பெரும் வரவேற்பு

சென்னை, தீபாவளி பண்டிகையொட்டி இயக்கப்பட்ட முன்பதிவு இல்லாத 12 பெட்டி சிறப்பு மெமு ரயில்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளியை ஒட்டி, பயணியர் வசதிக்காக, கடந்த 31ம் தேதி தாம்பரம் --- திருச்சி, சென்னை --- மதுரைக்கு முன்பதிவில்லாத மெமு ரயில் அறிவிக்கப்பட்டது. இதில், தாம்பரம்,- மதுரை இடையே முதன்முறையாக 'மெமு' ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல, பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக, மதுரையில் இருந்தும், திருச்சியில் இருந்தும் கடந்த 2ம் தேதி இரவு மெமு ரயில்கள் இயக்கப்பட்டன. ஒரே நேரத்தில் தலா 2,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த இரண்டு ரயில்களும் பயணியருக்கு பேருதவியாக அமைந்தது. ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு ஒருவருக்கு 140 ரூபாய் தான் டிக்கெட். அரசு பேருந்தை விட கட்டணம் குறைவு. இந்த மெமு ரயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும். குறைந்தபட்சமாக நெரிசல் மிக்க வார இறுதி நாட்களில் இயக்கினால் கூட, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ