உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் சில்மிஷம் அமைச்சு பணியாளர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் அமைச்சு பணியாளர் கைது

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அமைச்சு பணியாளரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த 26 வயது பெண், தேனாம்பேட்டையில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, கத்தீட்ரல் சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தாமோதரன் தெரு சந்திப்பு அருகே அவரை வழிமறித்த மர்மநபர், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் சத்தம் போடவே, பொதுமக்கள் கூடி சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து, நையப்புடைத்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், ராஜபாளையத்தைச் சேர்ந்த பாலமுருகன், 29, என்பதும், காவல் துறையில் அமைச்சு பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. ராயப்பேட்டை போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ