மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று
19-Mar-2025
புழல், புழல், கண்ணப்ப சாமி நகர், 12 வது தெருவை சேர்ந்தவர் விக்ரமன், 35. இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடியே, கார் ஓட்டுநராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து, விக்ரமனின் அண்ணன் சதீஷ்ராஜ் கொடுத்த புகாரில், புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், புழல் ஏரியில், ஜோன்ஸ் டவர் அருகே, சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரித்தபோது, காணாமல் போன விக்ரமன் என தெரிய வந்தது. விக்ரமன் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Mar-2025