உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மொபைல் போன் திருடன் கைது

 மொபைல் போன் திருடன் கைது

மாதவரம்: பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. திருச்சியில் 'டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், பெரம்பலுாரில் இருந்து வெங்காயம் லோடு ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம் காலை கோயம்பேடு வந்துள்ளார். மாதவரம் சி.எம்.டி.ஏ., 'பார்க்கிங்' பகுதியில் லாரியை நிறுத்தி, அதிலேயே துாங்கியுள்ளார். இருவர், சுரேசின் மொபைல்போனை திருடி தப்பியோட முயன்றனர். சுதாரித்த சுரேஷ், சக ஓட்டுநர்களின் துணையோடு ஒருவரை பிடித்து, மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், புழலைச் சேர்ந்த அற்புதராஜ், 23, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !