உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலாளிகளை வெட்டிய மூவருக்கு வலை

காவலாளிகளை வெட்டிய மூவருக்கு வலை

மாங்காடு, மாங்காடை அடுத்த கெருகம்பாக்கத்தில், தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. அங்கு அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன், 44, பாஸ்கர், 57, ஆகிய இருவர், காவலாளியாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த உணவு டெலிவரி செய்யும் நபர், தாம்பரத்திற்கு செல்ல வழி கேட்டுள்ளார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், போரூர் செல்ல வழிகேட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கும், உணவு டெலிவரி நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மூன்று பேரும் சேர்ந்து உணவு டெலிவரி நபரை தாக்கியுள்ளனர். இதை காவலாளிகள் சிங்காரவேலன், பாஸ்கர் ஆகியோர் தடுக்க முயன்றனர். அப்போது, மூன்று பேர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களையும்வெட்டிவிட்டு தப்பினர். புகார்படி மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை