உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 விதிமீறல்களுக்கே அபராதம் போலீசாருக்கு புதிய உத்தரவு

3 விதிமீறல்களுக்கே அபராதம் போலீசாருக்கு புதிய உத்தரவு

கடந்த மாதம் ஐந்து வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதித்தால் போதும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவித்த நிலையில், தற்போது மூன்று வகை விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுத்தால் போதும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அருண், போக்குவரத்து போலீசாருக்கு, ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டுதல், 'நோ-என்டரி' என அறிவிக்கப்பட்ட அனுமதி இல்லாத வழியில் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்வது என, ஐந்து விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் விதித்தால் போதும் என, அறிவிக்கப்பட்டது.தற்போது அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ரேஸ் ஆகிய மூன்று வகையான விதிமீறலுக்கு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதும் என, போக்குவரத்து போலீசாருக்கு, வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:சென்னையில் குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு மட்டுமே, வாகனங்களை நிறுத்தி நடவடிக்கை எடுக்கும்படி, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், மற்ற விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது.மொபைல் போனில் பேசியபடி வாகனம் இயக்குவர்களை பிடித்தால், 'இதற்கெல்லாம் நடவடிக்கை கூடாது என, கமிஷனர் கூறிவிட்டாரே; அப்புறம் ஏன் பிடிக்கிறீர்கள்' என, கேட்கின்றனர். தற்போது, வழக்குகள் பதிய எந்தவித இலக்கும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதேநேரம், கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் அனைத்து விதமான விதிமீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.****- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ