மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
10-Sep-2025
ஸ்கூட்டர் திருடியவர் கைது விருகம்பாக்கம்: வளசரவாக்கம், தேவி கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரியா. கிருஷ்ணமாச்சாரி நகர் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர், நேற்று காலை திருடு போனது. வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், காரம்பாக்கம் பகுதியில் திருடப்பட்ட வாகனத்துடன் நின்ற, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கவுதம், 19, என்பவரை கைது செய்தனர். அவருடன் திருட்டில் ஈடுபட்ட கூட்டாளியை தேடி வருகின்றன். கூரையை பிரித்து கடையில் திருட்டு வியாசர்பாடி: வியாசர்பாடி, எஸ்.எம்., பிரதான சாலையில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் ஜாஸ்மின், 48. வழக்கம்போல, இவர் நேற்று கடையை திறந்தபோது, கூரை பிரிக்கப்பட்டிருந்தது. அதுவழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து ஸ்பீக்கர் பாக்ஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 5,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். பாலியல் தொழில் கேரள நபர் கைது வியாசர்பாடி: வியாசர்பாடி, 18வது மேற்கு குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில், கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த முகமது சையத், 50, என்பவர், வாடகைக்கு வீட்டை எடுத்து, பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். லாரி ஓட்டுநருக்கு கத்திக்குத்து கொடுங்கையூர்: கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், கணபதி தெருவைச் சேர்ந்தவர் சீமான், 32; லாரி ஓட்டுநர். இவர் நேற்று, தன் வீட்டருகே லாரி ஓட்டுநர்களான தன் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக, அன்புமணி என்பவருக்கும், சீமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அன்புமணி கத்தியால் சீமானின் மார்பில் குத்தினார். படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Sep-2025