உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணிகள் முடியும் முன்பே துவக்கவிழா பொருட்காட்சிக்கு அனுமதி இல்லை

பணிகள் முடியும் முன்பே துவக்கவிழா பொருட்காட்சிக்கு அனுமதி இல்லை

சென்னை:சென்னை தீவுத்திடலில், 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி துவக்க விழா, கடந்த 6ம் தேதி நடந்தது. அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பொருட்காட்சி திறந்து இரண்டு நாட்களாகியும், அரசு துறைகள் சார்பில், அரங்கம் அமைக்கும் பணி முடியவில்லை. இதனால் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நேற்று பொருட்காட்சியை காண வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இது குறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது:பொருட்காட்சி துவங்கிய சில நாட்களுக்கு, கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், குடும்பத்துடன் பொருட்காட்சிக்கு வந்தோம். ஆனால், அனுமதிக்கவில்லை.'அரங்கம் அமைக்கும் பணி நிறைவடையவில்லை. 10ம் தேதிக்கு பிறகு வாருங்கள்' என்றனர். பொருட்காட்சியில் அரங்கம் அமைக்கும் பணிகள் முடிவதற்குள், ஏன் திறப்பு விழா நடத்த வேண்டும். பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதி இல்லை என்பதை தெரிவித்திருக்கலாம். அதை செய்யாததால், பொருட்காட்சிக்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டி உள்ளது. இப்போதும் கூட, 10ம் தேதி திறக்கப்படும் என, பொருட்காட்சி வாயிலில் இருப்போர் சொல்கின்றனர். அதிகாரபூர்வ தேதியை சுற்றுலாத்துறை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி