செங்குன்றம் அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி
செங்குன்றம், பாடியநல்லூர், கரிகாலன் நகர், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம், 40 ; தனியார் நிறுவன ஊழியர். இவர் பணி முடிந்து தனது 'டிவிஎஸ் ஆக்சஸ்' ஸ்கூட்டியில், நேற்று முன்தினம் இரவு ஜி.என்.டி., சாலை, செங்குன்றம் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.நாரவாரிக்குப்பத்தைச் சேர்ந்த புண்ணியகோட்டி, 44, என்பவர் அவரது 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கில் எதிர் திசையில் வேகமாக வந்து, ஜீவரத்தினத்தின் ஸ்கூட்டி மீது மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜீவரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார்.புண்ணியகோட்டிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.