உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புற்றுநோயாளிகளுக்கு ஒரு மாத இலவச ஆலோசனை

புற்றுநோயாளிகளுக்கு ஒரு மாத இலவச ஆலோசனை

சென்னை, ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு கூறியதாவது:இந்தியாவில் முதன்மையான 'காஸ்ட்ரோ என்ட்ரோலஜி, லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையை ஜெம் மருத்துவமனை மேற்கொள்கிறது. உலக புற்றுநோய் தினத்தை நினைவுக்கூறும் வகையில், பிப்., மாதம் முழுதும், புற்றுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.அதற்காக, 'ஜெம் ஆன்கோஷீல்ட்' திட்டத்தை துவக்கி உள்ளோம். இத்திட்டம், வயிறு, இரைப்பை குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு, ஆரம்பகால நோயறிதல் சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பை மேம்படுத்துவது நோக்கமாக கொண்டது. புற்றுநோய் மருத்துவ ஆலோசனை தேவைப்படும் அனைவருக்கும், புற்றுநோய் பராமரிப்பை வழங்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ