உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

படப்பை, தாம்பரம் அருகே படப்பை, விவேகாந்தா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 44. ஒலி, ஒளி அமைக்கும் சவுண்டு சர்வீஸ் கடை நடத்தி வந்தார். படப்பை அருகே செரப்பணஞ்சேரி பகுதியில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார்.அப்போது அருகில் இருந்த மின்கம்பியில், இரும்பு கொடிக்கம்பம் உரசி, மின்சாரம் பாய்ந்தது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ