மெட்ரோவில் கூடுதல் நுழைவாயில் திறப்பு
சென்னை, சென்னையில் பயணியர் அதிகமாக வரும் மெட்ரோ ரயில் நிலையங்களை தேர்வு செய்து, கூடுதல் நுழைவாயில்கள், 'எஸ்கலேட்டர்கள், லிப்ட்' அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணியரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளுடன் நேற்று கூடுதல் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. இவற்றை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை ஆலோசகர் மால்யா திறந்து வைத்தார்.