உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரங்கிமலை - மேடவாக்கம் சாலையில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு; நில அளவைக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம்

பரங்கிமலை - மேடவாக்கம் சாலையில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு; நில அளவைக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம்

சென்னை; பரங்கிமலை- - மேடவாக்கம் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு தேவையான இடத்தை கணக்கெடுக்க வந்த அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரங்கிமலை- - மேடவாக்கம் பிரதான சாலையில், நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சாலையின் குறுக்கே, வேளச்சேரி- - பரங்கிமலை உள்வட்ட சாலை அமைந்துள்ளது. இதனால், ஆதம்பாக்கம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், மேம்பால ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் காரணமாக, பரங்கிமலை- - மேடவாக்கம் சாலையில் உள்வட்ட சாலை சந்திப்பு அடைக்கப்பட்டது. பரங்கிமலையில் இருந்து வருவோர், உள்வட்ட சாலையில் பயணித்து, 'யு - -டர்ன்' செய்து, மேடவாக்கம் சாலையை அடையும் நிலை உள்ளது. இதையடுத்து, பரங்கிமலை- - மேடவாக்கம் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அ தற்காக, கடந்த 2021ம் ஆண்டு, சாலையின் இருபுறமும், 15 அடி நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான ஆவணங்கள், நெடுஞ்சாலை, மாநகராட்சி சார்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்ப ட்டது. இந்நிலையில், சாலையின் மத்தியில் இருந்து கையகப்படுத்தப்பட்ட, 15 அடி நிலம் உள்ளதா, மேலும் சுரங்கப்பாதை அமைக்க எவ்வளவு இடம் தேவைப்படும் என்பது குறித்து, நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறையினர் நேற்று கணக்கெடுக்க வந்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆவணங்கள், நெடுஞ்சாலை, மாநகராட்சி சார்பாகவும் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. அதற்கு பின் நிலம் எடுக்க மாட்டோம் எனக்கூறி, மீண்டும் நிலம் எடுக்கும் நோக்கில் செயல்படுவது சரியில்லை எனக்கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை