உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கரணை மேம்பாலத்தின் கீழ் ரூ.2.25 கோடியில் பூங்கா திறப்பு

பள்ளிக்கரணை மேம்பாலத்தின் கீழ் ரூ.2.25 கோடியில் பூங்கா திறப்பு

சென்னை மாநராட்சியில் விளையாட்டு திடல், பூங்கா, ஏ.பி.சி., மையம், நீர்நிலை பாதுகாப்பு என, 17 பணிகள், 29.88 கோடி ரூபாய் முடிக்கப்பட்டன. அவற்றை துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.இந்த பணிகளில் ஒன்று பள்ளிக்கரணை, ரேடியல் சாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா. 8,267 சதுர அடி காலி இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் 840 அடி நீளத்திற்கும், 6.5 அடி அகலத்திற்கும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.தவிர 8,202 சதுர அடி கட்டுமானத்தில் ஓவியம்தீட்டப்பட்டுள்ளது. இரண்டு நீரூற்று அமைக்கப்பட்டு உள்ளது. 20 மின் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இந்த பூங்காவை, பேருந்து சாலைத் துறை அமைத்து, பராமரிப்பு பணியை மாநகராட்சி வசம் ஒப்படைத்துள்ளது.இந்த பூங்காவை, 2.24 கோடி ரூபாயில் அமைத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், திறக்கப்பட்ட பூங்காவை பார்வையிட்டபோது, அத்தொகைக்கு ஏற்ற பணிகள் நடக்கவில்லை என, பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

சுத்தமான பூங்கா

தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், குரோம்பேட்டை, கஜலட்சுமி நகரில், திருப்பூர் குமரன் பூங்கா உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், அப்பகுதியில் வெட்டப்பட்ட மரக்கழிவுகளை, இப்பூங்கா வாசலிலேயே குவித்து வைத்திருந்தனர். குப்பையும் கொட்டினர்.இதை கண்டித்து, குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கத்தினர் சந்தானம் தலைமையில், நேற்று முன்தினம் பூங்காவில் உள்ள பொம்மை யானை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்ற தகவல் பரவியதும், மாநகராட்சி சுகாதார துறையினர் குப்பை, மரக்கழிவுகளை அகற்றி, பூங்காவை சுத்தப்படுத்தினர்.- - நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி