உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்னி பஸ் கவிழ்ந்து பயணியர் காயம்

ஆம்னி பஸ் கவிழ்ந்து பயணியர் காயம்

மதுராந்தகம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்ட பாக்கியலட்சுமி தனியார் சொகுசு பேருந்து, சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் பேருந்து வந்தபோது, அங்கு 'பொக்லைன்' வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.அப்போது, பொக்லைனில் மோதிய ஆம்னி பேருந்து, மைய தடுப்பில் ஏறி கவிழ்ந்தது. விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ