ஜி.எச்., 5வது மாடியில் இருந்து குதித்து நோயாளி உயிரிழப்பு
சென்னை, திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 42. இவருக்கு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என, விரக்தியில் இருந்தவர், நேற்று மாலை ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார். மருத்துமவனை போலீசார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷன், 19; சென்னை மருத்துவ கல்லுாரி மாணவர். நேற்று காலை, கல்லுாரி விடுதியில், கையை பிளேடால் அறுத்து, தற்கொலைக்கு முயன்றார். சக மாணவர்கள் அவரை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.