மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்
புதுவண்ணாரப்பேட்டை: பகல் மற்றும் இரவில் மின்தடையை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவில், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு தடைப்பட்ட மின்சாரம், இரவு, 10:00 மணியாகியும் வரவில்லை. மின்வாரியத்திற்கு தொடர்பு கொண்டபோது, போனை யாரும் போனை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், புதுவண்ணாரப்பேட்டை, லட்சுமி கோவில் - வள்ளலார் நெடுஞ்சாலையில், இரவு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள், மறியலில் ஈடுபட்டவர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த, சிங்கப்பெண் படை உதவி ஆய்வாளர் கிரிஜா, அவர்களை சமாதானம் செய்தார். பின், மறியல் கைவிடப்பட்டது.