உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கானா பாடகி மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

கானா பாடகி மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

கோவை: கோவை அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தர் இயக்க நிர்வாகி ஜலேந்திரன், வரசக்தி வீரஆஞ்சநேயர் திருக்கோவில் அறங்காவலர் திருப்பதி ஆகியோர், அய்யயப்ப சாமி சரண கோஷங்கள் முழங்க, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு அளித்தனர்.மனுவில், 'கானா பாடகி இசைவாணி, மேடை பாடலில் சபரிமலை அய்யப்ப சுவாமியை பற்றி தவறான கருத்துகளை பரப்பும் வகையிலும், அய்யப்ப பக்தர்கள் மனம் புண்படும் வகையிலும், ஹிந்து தர்மத்துக்கு எதிராகவும் பாடல்களை பாடியுள்ளார்.'ஹிந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய பாடகி இசைவாணி, வீடியோ வெளியிட்ட தி.க.,வினர் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, கைது செய்யவேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ