உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெங்களூரு விமான 168 பயணியரை அம்போ என விட்டு சென்ற பைலட்

பெங்களூரு விமான 168 பயணியரை அம்போ என விட்டு சென்ற பைலட்

சென்னை:கர்நாடக மாநிலம் பெங்களூருவில், நேற்று அதிகாலை மோசமான வானிலை நிலவியது. இதனால், அங்கு இறங்க வேண்டிய டில்லி, மும்பை, ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இருந்து வந்த நான்கு விமானங்கள், சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.காலை 9:00 மணிக்கு பின் வானிலை சீரடைந்ததால், உள்நாட்டு விமானங்கள் பெங்களூரு சென்றன. ஆனால், அபுதாபியில் இருந்து வந்த 'ஏர் இந்தியா' பெங்களூரு திரும்பவில்லை.விமானத்தில், 168 பயணியர் காத்திருந்த நிலையில், விமானி, தனக்கு பணி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி ஓய்வெடுக்க சென்றார். இதனால், பல மணி நேரமாக விமானத்திலேயே தங்கியிருந்ததால், பயணியர் அவதிக்குள்ளாகினர். அவர்கள், விமானத்திலேயே அமர்ந்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், சிறப்பு அனுமதி பெற்று, பயணியரை சென்னை விமான நிலையத்திலேயே, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனைகளை நடத்தினர். பின், அவர்கள், சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை