உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்தில் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ

பேருந்தில் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ

வேளச்சேரி : பேருந்தில், சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். தரமணியை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியும், அவரது தாயாரும், கடந்த 11ம் தேதி, வேளச்சேரியில் இருந்து தரமணி நோக்கி செல்லும் பேருந்தில் ஏறினர். பேருந்தில் வைத்து, ஒரு வாலிபர் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். பேருந்தை விட்டு இறங்கிய பின், தாயாரிடம் சிறுமி கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று அதே நிறுத்தத்தில் அந்த வாலிபர் நின்றார். உடனே, தாயார் பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து, கிண்டி மகளிர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், தரமணியை சேர்ந்த ஜமால், 26, என, தெரிந்தது. போலீசார் அவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை