மேலும் செய்திகள்
விடுதலையான நாளில் பைக் திருடிய வாலிபர்
16-Jan-2025
ஜெ.ஜெ.நகர் :ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்லும்போது, வாலிபர் ஒருவர் சிறிமியின் கையை பிடித்து இழுத்து, தன்னை காதலிக்க வேண்டும் என, 'லவ் டார்ச்சர்' கொடுத்துள்ளார்.சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட பகுதிவாசிகள், அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து, ஜெ.ஜெ.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அம்பத்துார், மண்ணுார்பேட்டையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரான பிரேம்நாத், 31, என தெரிந்தது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்தனர். மாலை 6:00 மணியளவில், மருத்துவ பரிசோதனைக்காக, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.நீதிபதி முன் ஆஜர்படுத்த சி.டி.எச்., சாலை வழியாக அழைத்து சென்றனர். இரவு 7:00 மணியளவில், அம்பத்துார் அருகே வந்தபோது, தனக்கு வாந்தி வருவதாக பிரேம்நாத் கூறியுள்ளார். அம்பத்துார் டன்லப் அருகே போலீசார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.இதை பயன்படுத்தி, போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து, பிரேம்நாத் கைவிலங்கோடு தப்பினார். இதை சற்றும் எதிர்பாராத போலீசார், பிரேம்நாத்தை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.இந்த நிலையில், இரவு 11:00 மணியளவில், தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே, ஒருவர் கைவிலங்குடன் சுற்றிதிரிவதாக கிடைத்த தகவலின்படி, தனிப்படை போலீசார் விரைந்தனர்.ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த பிரேம்நாத்தை பிடித்ததும், போலீசார் பெருமூச்சு விட்டனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் மீண்டும் அம்பத்துார் அழைத்து வந்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நேற்று நள்ளிரவு சிறையில் அடைத்தனர்.
16-Jan-2025