உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி சிறையில் கைதி தற்கொலை முயற்சி

பூந்தமல்லி கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி சிறையில் கைதி தற்கொலை முயற்சி

பூந்தமல்லி, மதுரை, திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 2011ல் ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில், பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வழக்கில் ஜாகிர் உசேன், 37, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு கருதி, இரு மாதங்களுக்கு முன், பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம், சிறையில் இருந்த எறும்புகளை கொல்ல பயன்படுத்தும் மருந்தை சாப்பிட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.முதற்கட்ட விசாரணையில், ஜாகிர் உசேனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கிடைத்தும், அதற்கான உத்தரவாதம், தொகை கட்ட முடியாததால், சிறையிலே தொடர்ந்து இருந்ததும், அதனால் தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை