உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை வெட்டு பணிக்கு தடை

சாலை வெட்டு பணிக்கு தடை

சென்னை, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பேருந்து மற்றும் உட்புற சாலைகளில், நாளை முதல் சாலை வெட்டு பணிகள் மேற்கொள்ள, மாநகராட்சி தடை விதித்துள்ளது.இது குறித்து, சென்னை மாநராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து சாலைகள், உட்புற சாலைகளில், பல்வேறு சேவை துறைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும், சாலை வெட்டுகள் அனைத்தும், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.அனைத்து சேவை துறைகளுக்கும், சாலை வெட்டும் பணியை, நிறுத்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும், வட்டார துணை கமிஷனர்களிடம் ஒப்புதல் பெற்று, சாலை வெட்டு பணிகள் மேற்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
செப் 29, 2024 10:18

சென்னை கார்பொரேஷன் ரெஜிஸ்ட்ரார்ஸ் - வார்டு 8 மண்டலம் 100 குழந்தைகளின் பிறந்த சான்றதழ் வழங்குவதில் பெரும் பணம் வாங்கும் ஊழியர்கள் , வேண்டுமென்றே காலா தாமதம் செய்து பணம் பிடுங்கும் கொள்ளைக்கூடாரம் வார்டு 8 அலுவலகம் - விஜிலென்ஸ் நடவடிக்கை தேவை


முக்கிய வீடியோ