வாசகர்கள் கருத்துகள் ( 10 )
விடுமுறை நாட்களில் மெரினாவில் கூடும் கூட்டத்தை விட்டு விட்டீர்களே.
அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் ஒரு ஊர் பெரிதாக வீங்கியிருக்கிறது என்றால் அது சென்னை தான். வளர்ச்சி இல்லாமல் வீங்கி இருக்கும் ஒரு விளங்காத ஊர் என்றால் அதுவும் சென்னை தான். குறைந்த பட்சம் பத்து அல்லது பதினைந்து லட்சம் பேர் அண்டை மாவட்டங்களிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் வந்து செல்கிறார்கள் என்று சொல்லலாம். சென்னை பணம் மட்டுமே தருகிறது. நிம்மதியை அல்ல. இதை அங்கு வாழும் அனைவரும் அறிவர். அங்கு வேலைபார்க்கும் அனைவரையும் மனசாட்சியை தொட்டு சொல்லச்சொல்லுங்கள், நிம்மதியாக உள்ளனரா என்று . ஒருவரும் சொல்லமாட்டார்கள். எங்கு சென்றாலும் , எதெற்கெடுத்தாலும் கூட்டம். போக்குவரத்து நெரிசல். ஒரு இடத்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. நான் மெட்ரோ சிட்டி யில் வசிக்கிறேன் என்று பந்தா காட்டினால் போதுமா ? கூட்டம் அதிகமாக இருந்தால் வரிசையில் நிற்கலாமே ஒரு ஒழுங்கான வாழ்க்கை வாழவேண்டாமா ? அதற்கும் அங்கே வாழும் மக்களுக்கு நாகரிகம் கற்றுத்தரவேண்டுமா ? மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊருக்கு வருவதிலும் போவதிலும் செலவழிக்க வேண்டுமா ? அரசாங்கமும் மாவட்டம் சார்ந்த அலுவல்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலமாக நிறைவேற்ற ஏதுவாக நிர்வாகத்தை சீரமைத்தால் என்ன ? யாரை கேட்டாலும் சென்னையில் தான் அரசு சம்பந்தப்பட்ட வேலை முடியும் என்று ஏதாவது சாக்குபோக்கு சொல்லி கூட்டமாக போகிறார்கள். தனியார் கம்பெனி உயர் அதிகாரிகளும் சென்னைதான் எல்லாவேலைகளுக்கும் நல்ல ஊர் என்று அவர்களாகவே ஒரு பிம்பத்தை கட்டமைத்து விட்டு அனைத்து உயர்மட்டவேலைகளுக்கு சென்னையில் அலுவலகம் கட்டுகிறார்கள் அல்லது அமைத்துக்கொள்கிறார்கள். மக்கள் தொகை அதிகமாக உள்ளது , எனவே அங்குதான் வியாபாரம் சூப்பராக இருக்கும் என்று காய்கறி, மளிகை, , பால், ரியல் எஸ்டேட் இப்படி சகட்டுமேனிக்கு சென்னையில் இதுசம்பந்தமாக சென்றுவரும் கூட்டத்தை அவர்கள் பங்குக்கு அதிகப்படுத்திவிட்டார்கள். துணி மணி வாங்க உலகத்தில் ரெங்கநாதன் தெருவை விட்டால் மலிவாக எங்குமே கிடைக்காது என்று வர்றாங்க பாருங்க கூட்டம் கூட்டமா ஐயோ ஐயோ , இப்படி கூட்டத்தில் சென்று வருவது பத்தாது என்று வாரக்கடைசியில் கூட்டம் கூட்டமா ஊருக்கு போக பெருங்கூட்டம். சென்னை மக்களில் பாதி பேர் அந்த ஊரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அரசு இந்த விஷயத்தில் எல்லாவித நடவடிக்கையையும் மேற்கொண்டு மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யவேண்டும். இல்லையென்றால் மனுஷன் கடைசி வரைக்கும் பெருகிவரும் கூட்டத்தில் அலைந்தே சாகவேண்டியதுதான்.
இங்க பொது மக்கள் ஐ குறை சொல்லும் ....க்கு. ஏன் வேலைக்கு சென்னை மட்டுமே வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலை உருவாக்கியது யார். ஏன் தென் மாவட்டங்களில் தொழில் சாலைகள் துவக்க படவில்லை. இருந்த ஒன்றிரண்டு ஆலை உம் மூடப்பட்டது யாரால். மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பரவலாக செய்ய வக்கில்லை. இதில் பொது மக்கள் மீது குற்றம் கூறி 200 உ.பி க்கள் பதிவு வேறு. வெறும் 6000 பேர் பயணம் செய்ய 100 பேருந்து ஏற்பாடு செய்ய முடியாது ஆனால் கழக மாநாடு க்கு 2000 அரசு பேருந்து ஏற்பாடு செய்ய முடியும். இன்றைய நவீன உலகில் இதெல்லாம் எளிதில் சரி செய்ய முடியும். ஆனால் technology செய்தால் இவர்கள் கொள்ளை அடிப்பது தெரிந்து விடும். இவனுக்கு ஓட்டு போட்ட பாவம் படுத்தி எடுக்கிறது.
எப்ப பாத்தாலும் ஒரு பண்டிகை, ஒரு விடுமுறை வந்துருது. போதாக்குறைக்கு கலியாணம், முகூர்த்த நாள் வேற. போட்டி போட்டுக்கிட்டு விடியல், ஒன்றிய விடுமுறை. வேலை செய்யறாங்களோ இல்லியோ விடுமுறைக்கு பையைத் தூக்கிட்டு கெளமிடுவாங்க. எல்லா பண்டிகை, தலைவர்கள் தின விடுமுறைகளை ரத்து செய்து ஒரு அப்த்து நாள் லுவு தேவைப் பட்டவங்க எடுத்துக்கற மாதிரி சட்டம் போடணும். தீவாளிக்கு முஸ்லிம்கள் உழைக்கட்டும். ரம்ஜானுக்கு மத்தவங்க உழைக்கட்டும். கிறிஸ்துமஸ், பொங்கல், மகாவீர் , காந்தி ஜெயந்திக்கு லீவு எடுக்கறவன் எடுத்துக்கட்டுமே. உழைப்பு பெருகிற வழியைக் காட்டுங்க.
இங்கு அரசாண்ட ஒருவர் வேண்டாத நாட்களுக்கு எல்லாம் விடுமுறை அளித்து அது யார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
விசேஷ நாட்களைத் தவிர இதர நாட்களில் பெரும்பாலான பேருந்துகள் காலியாக போகின்றன. திருச்சி வரை பின்னாடி போட்டி போட்டுக் கொண்டு பேருந்துகள் போகின்றன எந்த பேருந்திலும் முழுவதுமாக பயணிகள் இருக்காது. ஒருமுறை உளுந்தூர்பேட்டை சென்றபோது வெறும் எட்டு பேர் மட்டுமே திருச்சி பேருந்தில் இருந்தனர். இப்படி எல்லாம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டுமா. விசேஷ நாட்கள் இல்லாத மற்ற நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருச்சிக்கு பேருந்து இயற்றினால் போதும்.
அவர்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் எல்லோரும் சென்னைக்கு படையெடுக்கிறார்கள். சென்னையில் இருக்கும் எல்லா வசதிகளும் எல்லா இடங்களிலும் ஏற்படுத்தி வேலை வாய்ப்பை பெருக்கினால் அவரவர்கள் அவரவர்கள் ஊர்களில் வசிப்பார்கள். ஆனால் எல்லாம் சென்னைக்கு என்ற மனப்பான்மையில் அரசு இயங்கி வருகிறது தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற ஊர்களும் இருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சென்னையில்மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்து நிலையத்தை 40 கிலோமீட்டர் தள்ளி கட்டினார்கள் அங்கேயும் இதே பிரச்சினை அப்படியே பேருந்து நிலையத்தை தள்ளிக் கொண்டே போனால் நீங்கள் உங்கள் ஊருக்கு போகும் தூரம் குறைவாக தெரியும்.
இதையே வேலையா போச்சு உங்களுக்கு எதுக்கு எல்லாரும் ஒரே நாள்ல ஊருக்கு போறீங்க. அரசு எத்தனை பேருந்துகள் இயக்க முடியும். ரயில் நிலையத்தில் போய் மறியல் பண்ணுங்க ஒவ்வொரு பத்து நிமிஷத்துக்கு உங்க ஊருக்கு ரயில் விடும்படி.
இன்னும் ஒரு ஆறு மாசம் தான் அது வரை பொறுத்து கொள்ளுங்கள் அப்புறம் அதுவே பழகி விடும் ....
போராட்டம் எல்லாம் நடத்துங்க. ஆட்சியாளரிடம் கேள்வி கேட்டு அசத்துங்க. ஆனா அடுத்த தேர்தலிலும், காசு, இலவசங்களை கொடுப்பதான வாக்குறுதி அதில் மயங்கி இவர்களுக்கே ஓட்டு போடுங்க. இவங்க காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவதால் பாதிப்பு எல்லோருக்கும் தான். இவர்களுக்காவது ஏதோ உரிமை தொகை, உரிமை பயணம் என ஏதாவது கிடைத்து விடுகிறது. எங்களை பாருங்கள். இவர்களின் செயலால் பாதிக்க படுவது எல்லோரும்.