உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போராட்டம் ஒத்திவைப்பு

போராட்டம் ஒத்திவைப்பு

எண்ணுார்: எண்ணுாரில், ‘மீன்கள் இறப்பிற்கு மனித கழிவுகள் காரணம்’ என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தை கண்டித்து, இன்று போராட்டம் நடத்த, மீனவ கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், திருவொற்றியூர், த.வெ.க., -– எம்.எல்.ஏ., செந்தில்குமார் மற்றும் பல துறை அதிகாரிகள், தாழங்குப்பத்தில் நேற்று, மீனவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது மீனவர்கள், ‘சட்டசபையில் அமைச்சர், மனித கழிவு தான் காரணம் என்ற முடிவுக்கு எப்படி வந்தார். அரசின் எந்தெந்த துறைகள், தண்ணீர் மற்றும் மீன் மாதிரிகளை எடுத்து சென்றனர். அதன் முழு தகவல் வேண்டும்’ என, கேள்வி எழுப்பினர். அப்போது, ‘உரிய முறையில் விசாரிக்கப்படம். அதுவரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டாம்’ அதிகாரிகள் கூறினர். இதனால், இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை