உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் புனரமைப்பு

ரயில் அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் புனரமைப்பு

அடையாறு, அடையாறு மண்டலம், 173வது வார்டு, மத்திய கைலாஷ் முதல் திருவான்மியூர் மேம்பால ரயில் நிலையம் வரை, மேம்பால ரயில் பாலத்தின் கீழ் பகுதியில், 2 கி.மீ., நீளம், 80 அடி அகலத்தில், அமுத பெருவிழா பூங்கா அமைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.இதில், விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதை, வேலி, இருக்கை உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.மேலும், புல் தரை புனரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, 2.40 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது.இதற்கான பணிகளை விரைவில் துவங்கி, பருவமழைக்கு முன் முடிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ