ராம்ராஜ் காட்டன் - ரம்யம் பட்டுச்சேலை பிரிவு திறப்பு
தி.நகர்: 'ராம்ராஜ் காட்டன்' நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி மற்றும் 'ரம்யம்' என்ற பட்டுச்சேலைகள் பிரிவை, நடிகை நதியா நேற்று திறந்து வைத்தார். தி.நகர், பனகல் பூங்கா எதிரே 'ராம்ராஜ் காட்டன்' ஜவுளி கடை உள்ளது. இதன் விரிவாக்கப்பட்ட பகுதி மற்றும் 'ரம்யம்' என்ற 'பிராண்டட்' பட்டுச்சேலைகள் பிரிவை, நடிகை நதியா நேற்று திறந்து வைத்தார். மேலும், பாரம்பரிய நெசவுகளின் செழுமையை நவீனகால வடிவமைப்பில் பிரீமியம் தொகுப்பாக நெய்யப்பட்டுள்ள 'சுபாகா' பட்டுச்சேலைகளையும், அவர் அறிமுகம் செய்தார். இந்நிகழ்வில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன், நிர்வாக இயக்குநர் அருண்ஈஸ்வர், இயக்குநர்கள் சுமதி நாகராஜன் மற்றும் ஆர்த்திகா அருண் ஈஸ்வர் நடிகை தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'ரம்யம்' பிரிவில் செமி ரா சில்க், செமி டஸ்ஸர், செமி லினன், கேரள புடவைகள் என, பல்வேறு தொகுப்புகள் உள்ளன. இந்த ஆடை தொகுப்புகள், பண்டிகை காலங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அன்றாடம் அணிவதற்கு ஏற்றவகையில் அழகிய வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன. நடிகை நதியா கூறுகையில், ''பாரம்பரியம் மாறாத, அதேசமயம் புதுமையான ஆடைகளை நவீன காலத்திற்கு ஏற்ற வகையில், ராம்ராஜ் காட்டன் வழங்கி வருகிறது. பெண்களுக்கு தனியாக ரம்யம் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. ''இது, ராம்ராஜ் காட்டன் நிறுவனரின் மகளும், அந்நிறுவன இயக்குநருமான ஆர்த்திகாவின் கனவு திட்டம். அவரது திட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.