வரும் 14ல் ரேஷன் குறைதீர் முகாம்
சென்னை: தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், சென்னையில் உள்ள 19 மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் அலுவலகங்களில் ரேஷன் குறைதீர் முகாம், வரும் 14ம் தேதி நடக்க உள்ளது. காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும் இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட, பொது வினியோக திட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சேவைகள், ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், கார்டுதாரர்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணுடன் முகாமில் பங்கேற்குமாறு, உணவு வழங்கல் துறை ஆணையர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.