உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிகாலில் இளைஞர் உயிரிழப்புக்கு நிவாரணம்: பழனிசாமி வலியுறுத்தல்

வடிகாலில் இளைஞர் உயிரிழப்புக்கு நிவாரணம்: பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை, 'சென்னையில் மழை நீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:சென்னை, அசோக்நகரில் சாலையோரம், உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த மழை நீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் தவறி விழுந்து இறந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவுநீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவுநீர், 10 செ.மீ., மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் கால்வாய்கள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள மாநகராட்சி பூங்காக்கள், என அவல நிலையில் வைத்திருக்கும், தி.மு.க., அரசின், சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடே இத்துயர சம்பவத்திற்கு காரணம்.இம்மரணத்திற்கு, தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத, குடும்ப நலனையே பிரதானமாகக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வருத்தம் தெரிவிக்கிறோம்கே.கே.நகர், ஜவஹர்லால் நேரு சாலையில்நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் பணி நடக்கிறது. அங்குள்ள பள்ளத்தில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவத்திற்கு, வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.மேலும், இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளின் போது, பாதுகாப்பு வேலிகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.- பிரியா மேயர், சென்னை மாநகராட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ