உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வடகுருஸ்தலத்தில் திருப்பணி துவக்கம்

 வடகுருஸ்தலத்தில் திருப்பணி துவக்கம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், 'வடகுருஸ்தலம்' என்றழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி; அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி மற்றும் பொன்னியம்மன் கோவில்களில், சில மாதங்களுக்கு முன், பாலாலயம் நடத்தப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, மூலவர் சன்னிதிக்காக திருப்பணி துவங்கப்படவுள்ளது. இதனால், வடகுருஸ்தலத்தில், மூலவர் சன்னிதி திருப்பணிக்களுக்கான பாலாலயம், இன்று நடைபெற்று நடை சாத்தப்பட உள்ளது. பொன்னியம்மன் கோவிலில், 8ம் தேதி பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, நடை சாத்தப்பட உள்ளது. இனி, மூன்று கோவில்களிலும், திருப்பணிகள் முழுமையாக முடிவுற்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பின்பே, சுவாமி தரிசனம் மேற்கொள்ள முடியும். விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை