உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சார ரயிலில் மின் சப்ளை கருவி பழுது 2 மணி நேரத்திற்கும் மேல் சேவை பாதிப்பு

மின்சார ரயிலில் மின் சப்ளை கருவி பழுது 2 மணி நேரத்திற்கும் மேல் சேவை பாதிப்பு

சென்னை, வியாசர்பாடி அருகே, மின்சார ரயில் இன்ஜினில் உள்ள மின் வினியோக கருவியில் ஏற்பட்ட பழுதால், இத்தடத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது; பயணியர் கடும் அவதியடைந்தனர்.சென்னை கடற்கரையில் இருந்து நேற்று இரவு 7:00 மணி அளவில் புறப்பட்ட மின்சார ரயில், வியாசர்பாடி அருகே செல்லும்போது, ரயில் இன்ஜின் மேல் பகுதியில் இருக்கும் 'பேன்டோகிராப்' எனப்படும் மின் இணைப்பு கருவி, திடீரென அறுந்து பழுதாகிவிட்டது. இதனால், மின்சார ரயில் திடீரென நிறுத்தப்பட்டது.இதையடுத்து, கடற்கரை மற்றும் சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லிவாக்கம், ஆவடி, திருநின்றவூர் உட்பட பல்வேறு மின்சார ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதியது.சென்ட்ரலில் இருந்து, மற்ற வழித்தடங்களுக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள், மின் ஊழியர்களும் அறுந்து விழுந்த மின் கம்பி, ரயிலுக்கு மின்வினியோகம் செய்யும் ஒயரையும் பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், இந்த தடத்தில் இரண்டு மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பப்டடது.அறிவிப்பு இல்லைரயில் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், மின்சார ரயில்களில் பயணிப்போருக்கு முறையான தகவல் கிடைப்பதில்லை. ரயில்களில் மணிக்கணக்கில், பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். ரயில் நிலையங்களில் கூட, ரயில் சேவை மாற்றம் தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவதில்லை.- பயணியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி