உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எட்டு போட வைக்கும் சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

எட்டு போட வைக்கும் சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

அயப்பாக்கம்:அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நான்காவது பிரதான சாலையில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. அங்கு, 11 ஆண்டுக்கு முன் போடப்பட்ட தார் சாலை, இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மழை காலத்தில், சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறுகிறது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து, புகார் அளிக்கும் போதெல்லாம், கட்டட கழிவுகள் கொட்டி பள்ளங்களை நிரப்புகின்றனர். அதேபோல், டோனோ கோலா கேம்ப் முதல் அயப்பாக்கம் வாட்டர் டேங்க் வரை 1.4 கி.மீ., துாரத்திற்கு சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பள்ளத்தில், வாகன ஓட்டிகள் தினமும் '8' போட்டபடி, 'சர்க்கஸ்' பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாரல் மழைக்கே சாலையில் திடீர் குட்டைகள் உருவாகி, வாகன ஓட்டிகளை பீதியடைய வைக்கின்றன.ஆவடியில் இருந்து அம்பத்துார், திருவேற்காடு பகுதிகளுக்கு விரைவாக செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை