உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெருவில் ரவுடியிசம் வாலிபர்கள் கைது

தெருவில் ரவுடியிசம் வாலிபர்கள் கைது

மதுரவாயல், ஜூன் 15- மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன், 46; தனியார் நிறுவன ஊழியர். இவர், 12ம் தேதி இரவு வீட்டு வாசலில் நின்றிருந்தார். அதே தெருவில் வசிக்கும் இருவர், அங்கிருந்தவர்களை ஒருமையில் பேசியும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.இதை நரேந்திரன் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும், நரேந்திரனை தாக்கினர். தடுக்க வந்த அவரது பாட்டி முருகம்மாளை உதைத்து, கீழே தள்ளினர்.மேலும், அப்பகுதியினர் தண்ணீர் பிடிக்கும் டிரம்களை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.இது குறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், 27, மற்றும் சையது அபுதாயர், 33, ஆகியோரை கைது செய்தனர்.இருவர் மீதும், மதுரவாயல் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ