உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விம்கோ நகரில் மருந்து கடையில் ரூ.29,600 திருட்டு

விம்கோ நகரில் மருந்து கடையில் ரூ.29,600 திருட்டு

எண்ணுார்:விம்கோ நகர், சக்திபுரம் பிரதான சாலையில், மத்திய அரசின் 'பாரத மக்கள்' மருந்து கடை வைத்துள்ளவர் முரளி கிருஷ்ணன், 40. இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் வியாபாரம் முடித்து, கடையை பூட்டிச் சென்றுள்ளார்.நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த, 29,600 ரூபாய் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.புகாரின் அடிப்படையில், எண்ணுார் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, 16 - 20 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள், இரண்டு ஸ்கூட்டர்களில் வந்து சிறிய கடப்பாரையால், மக்கள் மருந்தகம் அருகேயுள்ள கடையின் பூட்டை உடைக்க முயன்றதும், முடியாததால் அடுத்து மருந்து கடையின் பூட்டை உடைத்ததும் தெரியவந்தது.இதில், ஒருவர் உள்ளே சென்று பணம் திருடப்படும் வரை, மற்ற மூவரும் ஸ்கூட்டரில் உலா வந்தபடி வேறு யாரேனும் வருகின்றனரா என கண்காணிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தன.திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை