உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

எம்.கே.பி. நகர், திருமணமாகி ஓராண்டே ஆகும் நிலையில், இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், 19 வது கிழக்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஹர்ஷினி, 29, கடந்த, ஜூலை மாதம், தருண் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஒரு வாரமாக, கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக, சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த ஹர்ஷினி, நேற்று முன்தினம் இரவு, யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறி ஊக்கில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பின், வேலை முடித்து வீட்டிற்கு வந்த கணவர், மனைவி துாக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். எம்.கே.பி., நகர் போலீசார் இறந்த ஹர்ஷினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், முன் கோபம் கொண்ட ஹர்ஷினி, இதற்கு முன் பலமுறை தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.திருமணமாகி ஒராண்டே ஆகும் நிலையில் பெண் உயிரிழந்தது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ