மேலும் செய்திகள்
கேம்போர்ட் பள்ளியில் கோல்டன் பூட் சாம்பியன்ஷிப்
19-Oct-2024
சென்னை, சவீதா பொறியியல் கல்லுாரி சார்பில், சவீதா தேசிய விளையாட்டு திருவிழா, தண்டலத்தில் உள்ள சவீதா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.பள்ளிகளுக்கு இடையில் மாணவர்களுக்கு வாலிபால், கபடி, பேட்மின்டன் போட்டிகள் நடந்தன. மாணவியருக்கு, எறிப்பந்து, கோ - கோ மற்றும் பேட்மின்டன் போட்டிகள் நடத்தப்பட்டன.மாணவியருக்கான கோ - கோவில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதலிடத்தையும், பென்னேரி வேலம்மாள் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.மாணவருக்கான பேட்மின்டனில் ராணிபேட்டை இஸ்லாமியா ஆண்கள் பள்ளி முதலிடத்தையும், சிட்லபாக்கம் லயோலா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.மாணவியருக்கான பேட்மின்டனில் ஆவடி பி.எம்.,கேந்திரா வித்யாலயா, ராணிபேட்டை லிட்டில் பிளவர் பள்ளி, முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின. மாணவருக்கான வாலிபாலில், சென்னை ஒய்.எம்.சி.ஏ., பள்ளி முதலிடமும், சென்னை டான்பாஸ்கோ பள்ளி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின.மாணவருக்கான கபடியில், சென்னை ராஜா முத்தையா பள்ளி முதலிடமும், சென்னை அரசு பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.மாணவியருக்கான எறிபந்தில், முகப்பேர் வேலம்மாள், படப்பை ஆல்வின் பப்ளிக் பள்ளி முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தன.
19-Oct-2024