மேலும் செய்திகள்
மஹாராஷ்டிரா தேர்தலால் வெங்காயம் விலை உயர்வு
19-Nov-2024
சென்னை, மஹாராஷ்டிரா மாநிலத்தில், 'சீசன்' களைகட்டி வருவதால், மாதுளை பழங்கள் விலை குறைந்துள்ளது.மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், மாதுளை பழங்கள் அதிகம் விளைகின்றன. தற்போது, மாதுளை சீசன் களைகட்ட துவங்கி உள்ளது. மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, சென்னை கோயம்பேடு சந்தைக்கு, மாதுளை பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. தினமும் 30க்கும் மேற்பட்ட லாரிகளில், மாதுளை வரத்து உள்ளது. இதனால், அவற்றின் விலை குறைந்துள்ளது. முன்பு 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான, முதல்தர மாதுளை, தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரிக்கும் என்பதால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மாதுளை விலை குறைவு காரணமாக, சென்னையில் சாலையோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் அவற்றின் விற்பனை களைகட்டி வருகிறது.
19-Nov-2024