வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நீங்கள் வேலைக்கு சேரும்போது உங்கள் ஊதியம்,பணப்பலன்கள், ஊதிய உயர்வு போன்ற அணைத்து விசயங்கள் பற்றி தெரிந்து தானே சேர்ந்தீர்கள்? இப்போது ஊதியம் பற்றவில்லை என்று போராடும் நீங்கள் உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலா படிக்க வைக்கிறீர்கள்? பள்ளிக்கு செல்லாமல் போராடிக்கொண்டிருந்தால் ஏழை குழந்தைகள் படிப்பு என்னாவது?
அரசு சம்பளம் பெரும் ஊழியரின் மிக மோசமான செயல், அவர்களது குழந்தைகளை போராட்ட களத்திற்கு கொண்டுவந்து, அழவைத்து ஊடகங்களில் காண்பிக்க வைத்து, கேவலமான பரிதாபத்தை பொதுமக்களிடம் தேடுவது. இது கண்டிக்கத்தக்கது. மேலும், இவர்களது வாரிசுகளை, குறைந்த சம்பளம் தரும் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்கள் தரத்தை உறுதிசெய்துவிட்டு, இவர்கள் மட்டும் எவ்வளவு தான் சம்பளம் மற்றும் சலுகை தந்தாலும், போராடிக்கொண்டே இருப்பது. இவர்களின் தரம் தான் சந்தி சிரிக்கிறதே. தகுதி தேர்வில், தாய்மொழி பாடத்திலேயே அதிகமானோர் படுதோல்வி. தகுதி தேர்வு கூடாது, பணி சுமை கூடாது, பக்கத்து தெரு பள்ளிகளிலேயே வேலை வேண்டும். அரசின் கஜானா சாவியை இவர்கள் கையில் ஒப்படைத்து விடவேண்டும். முதலில் அரசு சம்பளம் பெரும் தேவையற்ற துறைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அரசு பள்ளிகளில் சம்பளத்தை தவிர, பள்ளி மற்றும் ஆசிரியரின் தரம், நிர்வாகம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை கண்காணிக்க, ஒரு சிறந்த தனியார் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இதை உடனே செய்யுங்கள். பிறகு தானாகவே கூட்டம் கூட்டமாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்னங்கால் பிடரியில் பட, வீட்டுக்கு ஓடிவிடுவர்.
தேர்தல் நேரத்தில் சிக்கல் வேண்டாமே என்று விட்டு வைத்து இருக்கிறார்கள். இல்லை என்றால் குண்டர் துறையை வைத்து தூக்கி தனிமை சிறையில் வைத்து சாத்து சாத்து என்று சாத்தியிருப்பார்கள். ஆசிரியர்களுக்கு சாதகமாக இருந்தாலுமே இனி தீம்க்காவுக்கு ஓட்டுப்போட யோசிக்க வேண்டும்.