உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சப்பாத்தி, சிக்கன் சாப்பிட்ட செக்யூரிட்டி உயிரிழப்பு

சப்பாத்தி, சிக்கன் சாப்பிட்ட செக்யூரிட்டி உயிரிழப்பு

விருகம்பாக்கம்:வீட்டில் சமைத்த சப்பாத்தி மற்றும் சிக்கனை சாப்பிட்ட, அடுக்குமாடி குடியிருப்பு செக்யூரிட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராய், 33. இவர், சென்னை சாலிகிராமம் இந்திரா காந்தி தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு, நேற்று முன்தினம் இரவு கடும் வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை, உடன் பணிபுரியும் உறவினர் ஒருவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு மருத்துவ பரிசோதனையில், பிரகாஷ் ராய் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.கடந்த 1ம் தேதி இரவு பிரகாஷ் ராய் சப்பாத்தி மற்றும் சிக்கன் சாப்பிட்டுள்ளார். அன்று முதல் ஒவ்வாமை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 'புட் பாய்சன்' ஆகி உயிரிழந்திருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை