உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் குணசேகரன், 32; சி.ஆர்.பி.எப்., வீரர். இவரது மனைவி கோமதி, 31. மூன்று குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்தனர். மூன்று மாதத்திற்கு முன் ஆவடியில் இருந்து மணிப்பூர் மாநிலம், இம்பாலுக்கு குணசேகரன் பணிமாறுதலில் சென்றார். அங்கிருந்து குணசேகரன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, கோமதி தவிர்த்துள்ளார். கடந்த மாதம், மனைவியின் தந்தை இறந்ததால், விடுமுறையில் தண்டையார்பேட்டை திரும்பிய குணசேகரன், சாஸ்திரி நகரில் உள்ள தனது தாயுடன் தங்கியிருந்தார். குடும்பப்பிரச்னை காரணமாக, நேற்று குணசேகரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை