உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் ஏழு இடத்தில் நீர்சூழலால் பாதிப்பு; உயிரிழப்பை தடுக்க தடுப்புகள் அமைப்பு

மெரினாவில் ஏழு இடத்தில் நீர்சூழலால் பாதிப்பு; உயிரிழப்பை தடுக்க தடுப்புகள் அமைப்பு

மெரினாவில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு, கடலோர பகுதிகளில் ஏழு இடங்களில் உள்ள நீர்சுழல்தான் காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து, அவ்விடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து வருகின்றனர்.உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவிற்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருவோர் கடலில் குளிக்கும்போது, திடீரென அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்படுகின்றனர். சிலரது உடல் சிறிது நேரத்திலேயே கரை ஒதுங்கிவிடுகின்றன. ஒரு சிலரது உடல், வேறு ஒரு பகுதியில் கரை ஒதுங்கும். ஒரு சிலரது உடல் கிடைப்பதில்லை.இதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரையிலான, மெரினா கடலோரப்பகுதிகளில் ஏழு இடங்களில் நீர் சுழல் தன்மைதான் காரணம் கண்டறியப்பட்டு உள்ளது. அவ்விடங்களில் குளிக்க செல்வோர், என்னதான் நீச்சல் பயிற்சி அறிந்து இருந்தாலும், நீர்சுழலில் சிக்கினால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது. எனவே, அவ்விடங்களில் எல்லாம் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில், இரும்பாலான தடுப்புகள் அமைத்து வருகின்றனர். எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்படுகின்றன.இதுகுறித்து, கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:சுற்றுலா தலமான மெரினாவில், நேப்பியர் பாலம் - சீனிவாசபுரம் வரை, ஏழு இடங்களில் நீர் சூழல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்ட இடங்களில் மட்டும், தடுப்புகள் அமைத்து, மக்கள் அவ்விடத்தில் செல்லாதப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ