மேலும் செய்திகள்
மாமல்லை சந்திப்புகளில் புதிதாக சிக்னல் அமைப்பு
07-Dec-2024
சென்னை, அண்ணாசாலை நந்தனத்தில் மின் இணைப்பு துண்டிப்பால், சிக்னல் செயல்பாடு முடங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை அண்ணாசாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. விமான நிலையங்களுக்கு செல்வோர் பயன்படுத்தும் சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து மிகுதியாக காணப்படும்.தேனாம்பேட்டை பகுதியில், தி.மு.க., அலுவலகம் இருப்பதால், கட்சியினர் வாகனம் வரிசை கட்டி நிற்கும்.நேற்று மாலை அண்ணா சாலையில், மின் துண்டிப்பு காரணமாக, நந்தனம் சிக்னல் செயல்படவில்லை. இதனால், போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் சென்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதோடு, விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் திணறினர்.போலீசார் கூறுகையில், 'சிக்னலில் மின் சேமிப்பு வசதி இல்லை. இதனால், 30 நிமிடங்கள் சிக்னல் செயல்படவில்லை' என்றனர்.
07-Dec-2024