உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெட்டி பெட்டியாக சிக்கிய சில்வர் கிண்ணங்கள்

 பெட்டி பெட்டியாக சிக்கிய சில்வர் கிண்ணங்கள்

எம்.கே.பி.: புதுவண்ணாரப்பேட்டை, இளைய தெருவில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் 1,600 சில்வர் கிண்ணங்கள் இருந்தன. விசாரணையில், கொடுங்கையூர், ஹார்பர் காலனியைச் சேர்ந்த பாத்திர கம்பெனி நடத்தி வரும், மனோ, 39 என்பவருக்கு சொந்தமானது என்றும், இவர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள முகேஷ் ஸ்ரீ பேலஸ் என்ற திருமண மண்டபத்திற்கு எடுத்து செல்ல அனுப்பியதும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், சில்வர் கிண்ணங்களை போலீசார் பறிமுதல் செய்து, தண்டையார்பேட்டை மண்டல அலுவலக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !