உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் ஏரி நீரில் மூழ்கி எஸ்.ஐ., மகன் பலி

புழல் ஏரி நீரில் மூழ்கி எஸ்.ஐ., மகன் பலி

ஆவடி, ஆவடி, சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ், 59; திருமுல்லைவாயில் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்.இவரது மூத்த மகன் அபிலேஷ், 31, நண்பர் விக்னேஷ், 31, என்பவருடன் நேற்று முன்தினம் மது அருந்தி, ஜெயராம் நகர் அருகில் உள்ள புழல் ஏரியில் குளித்தார். அப்போது நீரில் மூழ்கினார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர், இரவு 7:00 மணி வரை தேடியும் அபிலேஷ் கிடைக்கவில்லை. வெளிச்சம் இல்லாததால் திரும்பிவிட்டனர்.இந்நிலையில், நேற்று காலை அபிலேஷின் உடல், ஜெயராம் நகர் அருகே 200 மீட்டர் துாரத்தில் கரையில் ஒதுங்கியது.திருமுல்லைவாயில் போலீசார், அபிலேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை