உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடற்பயிற்சி கூடத்தில் தீ ஆறு பேர் பலத்த காயம்

உடற்பயிற்சி கூடத்தில் தீ ஆறு பேர் பலத்த காயம்

பெரவள்ளூர்:உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.பெரவள்ளூர், சிவ இளங்கோ சாலையைச் சேர்ந்தவர் ஹரிகோவிந்த், 21. இவருக்கு எஸ்.ஆர்.பி., கோவில் தெரு அருகே இரண்டு மாடி வணிக கட்டடம் உள்ளது. அங்கு, உடற்பயிற்சி கூடம், சிறிய விளையாட்டு மையம், காபி ஷாப் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், மின் கசிவு காரணமாக உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள் உட்பட சிலர் கட்டடத்தில் மாட்டிக்கொண்டனர். தகவலறிந்து அங்கு சென்ற கொளத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களை மீட்டனர்.இந்த தீ விபத்தில், பெரம்பூரைச் சேர்ந்த அவ்லினோ, 24; முகமது சுல்தான், 47; பெரவள்ளூரைச் சேர்ந்த செல்வா, 24; ஆரிப், 27; கொளத்துாரை சேர்ந்த ராகுல், 23 மற்றும் சந்தோஷ், 42, ஆகியோர் காயமடைந்தனர்.அனைவரும் பெரியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சந்தோஷ், முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததால், அவருக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !