உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளின் நகையை கேட்ட மாமியாரை மிரட்டிய மருமகன்

மகளின் நகையை கேட்ட மாமியாரை மிரட்டிய மருமகன்

கே.கே.நகர்:வடபழனி ஏ.வி.எம்., அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் லலிதா, 52. இவரது மகள் தீபா. கடந்த 2013ம் ஆண்டு தீபாவிற்கு, பல்லாவரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.திருமணத்தின்போது 100 சவரன் நகை மற்றும் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் பணிபுரிந்த ரமேஷ் பாபு, கடந்த 2019ல் குடும்பத்துடன் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் தங்கினார். ஆனால், மகளையும், பேத்தியும் பார்க்க லலிதா அனுமதிக்கவில்லை. தொடர்ந்து, அவர்களை அழைத்து கொண்டு திருப்பதி சென்றுள்ளார். அங்கு தீபாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருப்பதி சென்ற லலிதா, மகளை சென்னைக்கு அழைத்து வந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி தீபா உயிரிழந்தார். இதையடுத்து, பேத்தியை லலிதா வளர்த்து வந்தார்.இந்நிலையில், பேத்தியை பள்ளியில் சேர்க்க ஆவணங்கள் தேவைப்பட்டதால், கடந்த நவ., 7ம் தேதி பல்லாவரத்தில் உள்ள ரமேஷ் பாபு வீட்டிற்கு சென்று, பேத்தியின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள், மகளின் திருமணத்திற்கு அளித்த 100 சவரன் நகை உள்ளிட்டவற்றை திருப்பித்தர கேட்டார். அதற்கு, ரமேஷ் பாபு தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, கடந்த மாதம் 20ம் தேதி லலிதா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கே.கே.நகர் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ