உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கு சிறப்பு முகாம்

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கு சிறப்பு முகாம்

சென்னை: தாம்பரம் விமானப்படை நிலையத்தில், நேற்று ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு முகாம் நடந்தது. மத்திய பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை சார்பில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம், நாடு முழுதும் நடந்து வருகிறது. அதன்படி, தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில், நேற்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம் நடந்தது. இதில், 800க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்று, சான்றிதழுக்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். முகாமில், மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை செயலர் ஸ்ரீனிவாஸ், தாம்பரம் விமானப்படை நிலைய தலைவர் ஏர் கமடோர் தபன் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ